“என்னனு தெரியாம அந்த Massage-அ பண்ணிக்கிட்டேன்” வாழ் பட ஹீரோவின் பரிதாப நிலை !

18 July 2021, 8:11 pm
Quick Share

மிகவும் குறைந்தபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட “அருவி” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இந்த படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றார் அதிதி பாலன்.

இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரதீப் ஆண்டனி. தற்போது அருவி பட இயக்குநரின் அடுத்த படமான வாழ் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்திலும் முண்ணனி கதாபாத்திரத்தில் பிரதீப் ஆண்டனி நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அவ்வபோது ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதில், இந்தோனேஷியாவில் எல்லோரும் மசாஜ் எல்லாம் போனாங்க, ஒரு நண்பர் என்னிடம் வந்து காயின் மசாஜ் ஒண்ணு இருக்கு, ட்ரை பண்ணுங்கனு சொன்னாங்க, இவங்க ட்ரை பண்ணாம கூட சொல்றாங்கனு தெரியாம அப்பாவி மாதிரி போய் படுத்துட்டேன். நல்லா தான் இருந்துச்சு. போட்டோல பார்த்தா தான் ரணகளம் தெரியுது என சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் முதுகில் கோடு கோடாய் சிவந்து போய் இருக்கிறது..! இதுக்கு தான் விசாரிச்சிட்டு போகணும்னு சொல்றது..!

Views: - 180

1

0