பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் மாயா S கிருஷ்ணன். போல்டான போட்டியாளராக ஆரம்பத்தில் இருந்தே தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வந்த மாயா குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.அத்தோடு அதிக அளவில் அவர் விமர்சிக்கவும்பட்டார்.
தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும், விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். பிக்பாஸில் மக்கள் வெறுக்கத்தக்க போட்டியாளராக மாயா இருந்து வந்தார்.
இந்நிலையில், தெலுங்கில் கதாநாயகியாக மாயா அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் உருவாகி வரும் பைட்டர் ராஜா என்னும் திரைப்படத்தில் நடிகை மாயா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில், ஹீரோவாக ராம்ஸ் என்பவர் நடிக்கிறார். மேலும், இப்படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்குகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. மாயாவின் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
This website uses cookies.