இனி கமல் இல்லை, இந்த மாஸ் ஹீரோதான் இனிமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மக்கள் பிரதிநிதி !

21 March 2021, 1:46 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். கடந்த வருடம் மட்டும் கரோனா அச்சுறுத்தலால் அப்படி இப்படின்னு தள்ளிப்போய் செம்ம மாஸாக ஆரம்பித்து முடிந்தது.

மேலும் அடுத்து தொடங்கப் போகும் இந்த Big Boss நிகழ்ச்சியை வழக்கம்போல் இந்த முறையும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்குவார் என எண்ணபட்ட நிலையில் தற்போது செம்ம Twist..

ஏன் என்றால், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல் ஹாசன் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கான தனது முதல் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறார். ஒருவேளை பெரும் வெற்றியையோ அல்லது எதிர்பார்த்ததை விட நல்ல வாக்குகளையோ அவர் பெற்றால், அவர் அரசியலில் இன்னும் கவனம் செலுத்த வாய்ப்புகள் இருக்கு.

அதனால், Big Boss 5 தயாரிப்பாளர்கள் கமலுக்கு பதிலாக சிம்புவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகவும், அவரும் ஓகே சொல்லிவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

Views: - 77

6

2