பிரபல நடிகரின் படத்தில் கைகோர்த்துள்ள பிக்பாஸ் காதல் ஜோடி மற்றும் மாஸ்டர் பட நடிகர்..! வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
3 October 2022, 7:30 pm
Quick Share

அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தில் விஜய் பட நடிகர் உட்பட பாவனி, அமீர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 3 பிரபலங்கள் அஜித்தின் ‘துணிவு’ படத்தில் இணைந்துள்ளனர் . இதில் ஏற்கனவே ஒருவர் தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிபி சக்கரவர்த்தி ஆவார்.

மீதம் இருவர் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலிக்க துவங்கி, தற்போது சமூக வலைதளத்தில் டாப் டிரெண்டிங் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் அமீர் பாவனி ஜோடி தான்.

இந்த தகவலை பாவனி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்துள்ளார். விமானத்தில் சிபி சக்கரவர்த்தி, அமீர், பாவினி, மூவரும் ஒன்றாக இணைந்து பயணம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு… இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள, பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், அதில் பிக்பாஸ் டூ துணிவு என்றும் கேப்ஷன் போட்டுள்ளார்.

இதன் மூலம் தற்போது அமீர் பாவனி, சிபி சக்கரவர்த்தி மூவரும் துணிவு படத்தில் நடித்துள்ள தகவல் உறுதியாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜான் விஜய், தர்ஷன், சரவண சுப்பையா, போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்து வரும் நிலையில் இவர்களுடன் தற்போது இந்த மூவரும் இணைந்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடந்து வரும், துணிவு படத்தின் இறுதி கட்ட படபிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் ஆரம்பமாக உள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் பட த்தின் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ,மேலும் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயின் நிறுவனத்தின் மூலம் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை முடித்த கையோடு அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 165

0

0