பிக்பாஸூக்குப் பிறகு ரம்யா பாண்டியனுக்கு அடிச்ச ஜாக்பாட்!

27 January 2021, 7:11 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஜோக்கர் என்ற படத்தின் மூலம் பலரும் அறியும் நடிகையானார். எனினும், இந்தப் படங்களுக்குப் பிறகு நம்யா பாண்டியனுக்கு போதுமான வாய்ப்பு அமையவில்லை. எனினும், தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டு வந்தார்.

தனது வீட்டு மொட்டை மாடியில் ரம்யா பாண்டியன் எடுத்த கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் புகழ் ரம்யா பாண்டியனின் கெமிஸ்டரி உலகம் முழுவதும் பேசப்பட்டது. இந்நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியின் மூலமாக கலக்கப்போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கினார்.

இந்த நிலையில் தான் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், எப்போதும் போல தனது சிரிப்பு, கிளாமரை வெளிப்படுத்தி வந்த ரம்யா பாண்டியனுக்கு மக்கள் கடைசி வரை ஆதரவு அளித்தனர். இந்நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற ரம்யா பாண்டியன் இறுதிப் போட்டியின் போது வெளியேறினார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு வீடு திரும்பிய ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தின் சண்ட மேளத்துடன் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முதல் முறையாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்குகிறார். இவர் கூறிய கதை ரம்யா பாண்டியனுக்குப் பிடித்துப் போக உடனே ஒப்புக்கொண்டாராம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட்டும் கொடுத்துள்ளார்.

இது குறித்து ரம்யா பாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2டி நிறுவனம் தயாரிப்பில் நடிக்கிறேன். இந்த அற்புதமான வாய்ப்பிற்காக சூர்யாவு மற்றும் படக்குழு அனைவருக்கும் எனது நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0