சீறி எழும் வனிதா..! பதிலுக்கு பதில் பாய்ந்து பதிலடி கொடுக்கும் ஜூலி..!

Author: Rajesh
18 February 2022, 4:56 pm
Quick Share

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்களுக்குள் ஏகப்பட்ட காரசாரமான சண்டைகளும், விவாதங்களும் ரசிகர்களை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக வனிதாவும் பாலாஜியும் யாராவது ஒரு போட்டியாளருடன் ஏதாவது ஒரு பிரச்சனையை இழுத்துக்கொண்டே இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியான புரமோவில், கிட்சனில் சமைத்துக் கொண்டிருக்கும் வனிதாவிடம் ஜூலி ஏதோ பேச முயல்கிறார். அதற்கு நீ பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவாய் என்கிறார் பதில் தெரிவிக்கிறார் வனிதா.

நாமினேட் பண்ணி எவிக்ஷன் வரைக்கும் கொண்டு வந்துட்டு நோ ஹார்ட் ஃபீலிங்ஸ்னு சொல்லுவ… போய் உன் வேலைய பாரு… ஒருத்தர நாமினேட் பண்ணுவ, உன் பாயிண்ட் கரெக்ட்டா இருக்காது.. அவங்கக்கிட்டேயே எல்லாத்தையும் வாங்கி போட்டுப்ப… உன் கர்ட்டஸியை போய் குப்பையில போடு என்று சீறி எழுந்த வனிதா உன்னையெல்லாம் உள்ளேயே விட்டுருக்க கூடாது என்று காட்டமாக கூறுகிறார்.

இதனைக் கேட்ட ஜூலி, உடனே பொங்கி எழுந்து பதிலடி கொடுக்கிறார். உங்களையே விடும் போது என்னை விட மாட்டாங்களா என்கிறார். ஆனால் வெளியே வந்து சகபோட்டியாளர்களிடம் நடந்ததைக் கூறி அழது புலம்புகிறார்.

Views: - 489

0

0