தெருக்கூத்து கலைஞர் தாமரை செல்வி, பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நிலையில், தற்போது திரைப்பட நடிகையாக மாறியுள்ளார்.
தாமரை செல்வி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்பாக விளையாடி, மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்ததால், இவர் மீது தனி எதிர்பார்பை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சிக்குள் இவர் வந்த வேகத்திலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு செல்வார் என பலர் எதிர்பார்த்தனர். வரும் போது, கள்ளக்கபடம் இல்லாமல் இவர் பேசியது, நடந்து கொண்ட விதம் போன்றவை இவர் நடிக்கிறாரோ என்கிற சந்தேகத்தை மற்ற போட்டியாளர்களுக்கும் கூட வரவைத்தது. மேலும், பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியே வந்தார் தாமரை.
BB ஜோடிகள் நிகழ்ச்சியில், தன்னுடைய கணவருடன் சேர்ந்து நடனத்திறமையை வெளிக்காட்டி ஃபைனல் வரை வந்தார். ஒரு சில காரணங்களால், இவரால் வெற்றி கோப்பையை கைப்பற்ற முடியாமல் போனது. தனியாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதன் மூலமும் தற்போது சம்பாதித்து வருகிறார்.
இந்த நிலையில், பிக்பாஸ் தாமரைக்கு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது சினிமா வாய்ப்பை தட்டி தூக்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், ஓலை வீடு என அவரது சில மோசமான பக்கம் காட்டப்பட்டது. இதனால் அவருக்கு பலரும் உதவிகரம் நீட்டினார்கள். இதனிடையே, தொகுப்பாளரும் இசையமைப்பாராளரு மான ஜேம்ஸ் வசந்தன் முயற்சியில் தாமரை செல்வியின் குடும்பத்திற்கு வீடு ஒன்று அமைந்தது.
தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் தாமரை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பொம்மி சீரியலில் நடித்த வருகிறார், அன்மையில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த தாமரை அதில், மதுவால் தான் தன் வாழ்க்கை இழந்ததாகவும் பேசி உள்ளார். ஷூட்டிங்கில் போய் நின்றபோது என்ன நடிக்கிறீங்க என்று கிண்டல் செய்த போது தான் தெரிந்தது பிக் பாஸ் வீட்டில் அத்தனை கேமராம முன்பாக நான் நடித்ததாக கிண்டல் செய்தார்கள். இங்கு ஒரு கேமரா முன் என்னால் நடிக்க முடியவில்லை என்று உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு தான் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.
சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை இல்லை. யாரோ ஒருவருக்காக யாரோ ஒருவர் மீம்ஸ் போடுகிறார். அதற்காக நாம் ஏன் வருத்தப்பட வேண்டும். நிறைய மது பழக்கம் அதிகமாகிவிட்டது. என் வாழ்க்கை மதுவால் நிறைய சிரமப்பட்டு இருக்கு, அதனால் நான் விவாகரத்து செய்துவிட்டேன். இன்று காதலித்து கல்யாணம் செய்துவிட்டு பிரிகிறார்கள். அது எதனால் என்று தெரியவில்லை. மதுவால் தான் நான் வாழ்க்கையை இழந்தேன். இப்போது, குட்டி குட்டி பசங்க கூட மது இல்லாமல் இருப்பதில்லை. பெண்கள் ரொம்ப பாவம், அவர்களின் சிரமம் ஆண்களுக்கு தெரிவதில்லை. மது அருந்திவிட்டு பெண்களை சிரமப்படுத்த கூடாது என்று தாமரை பேசியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.