“என்ன இதுக்கு போய் இப்டி அடிச்சுக்குறாங்க” – நிஷா- அர்ச்சனா சண்டைய பாத்து பயந்த போட்டியாளர்கள் !

17 November 2020, 2:23 pm
Quick Share

அவங்கசண்டை, இவங்க சண்டை என Big Boss நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 45 நாட்கள் ஆகிவிட்டது. அதை முன்னிட்டு 45 மணி நேரம் டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோவில் அர்ச்சனா மற்றும் நிஷா ஆகிய இருவரும் தண்ணீர் பிடிக்க குழாயடிச் சண்டை போல ஒருத்தர் முடியை ஒருத்தி பிடிப்பது போல சண்டை போட்டு கொண்டனர்.

“என்னடா 10 குடம் தண்ணி கொடுக்குறீங்க அறிவு இருக்காடா உங்களுக்கெல்லாம்” என சோம் சேகரை பார்த்து நிஷா கேட்டபோது சைலண்ட் ஆக எஸ்கேப் ஆகிறார் சோம்.

அப்படியே வண்டியை அர்ச்சனா பக்கம் திருப்பி “இந்தா வந்துட்டா பாரு சிலுப்பி, இங்க குடத்துல தண்ணி பிடிக்க வந்தியா, குடத்தை திருட வந்தியா” என நிஷா ஓவராக பேச, அதற்கு அர்ச்சனாவும் சரி சமமாக நிஷாவுடன் சண்டை போட்டுக் கொண்டிருக்க பிக்பாஸ் வீடே ஒரே ரணகளமாக மாறியது.

ஒரு கட்டத்தில் இருவரும் தலைமுடியை பிடித்துக்கொண்டு சண்டை போட சக போட்டியாளர்கள் இது விளையாட்டு சண்டையா? அல்லது உண்மையான சண்டையா? என்று சந்தேகத்தோடு இந்த சண்டையை பார்த்து வருகின்றனர்.

இந்த டாஸ்க்கால் இன்றும் நாளையும் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.