“உன் வளர்ப்பு அப்படி, சரியான கலீஜ்” சம்யுக்தா-சனம் மோதல் !

24 November 2020, 6:09 pm
Quick Share

நேற்றைய Big Boss Episodeஇல் செம்ம Twist ஆக நாமினேஷனை மாற்றி அமைக்கும் சக்தி கொண்ட நாமினேஷன் புரோசஸ் கார்ட் அறிமுகம் செய்யப்பட்டு,அந்த நாமினேஷன் கார்டை பெற ஏழு பேர்களும் போட்டி போட்ட நிலையில் இறுதியில் அனிதா ஜெயித்தார்.

அடுத்த Twist ஆக நாமினேஷனில் சம்யுக்தாவை உள்ள கொண்டுவந்து அனிதா எஸ்கேப் ஆனார். இந்த நிலையில் அடுத்த மூன்றாவதாக வெளியான Promo-வில் கால்சென்டர் எபிசோட் ஆன பிக் பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி சம்யுக்தாவுக்கு ஃபோன் செய்து, “பயப்படாதீங்க நான் தான் பேசுறேன்” என்று கூற, அதற்கு சாம்,

“நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் நீங்கள் வாயை திறந்தால் ஒரே கலீஜ் ஆகத்தான் இருக்குது” என்று சனம்ஷெட்டியிடம் சொல்ல, அதற்கு சனம் “வாயைத் திறந்தால் கலீஜ் என்று சொல்வது நம்ம மைண்டில் கலீஜ் இருந்தால்தான் வாயில வரும்” என்று பதில் பேச,

மேலும், முன்பு கேப்டன்ஷிப் டாஸ்க் குறித்து சனம் ஒரு கேள்வியை கேட்க அதற்கு சம்யுக்தா, “அது அவங்கவங்க வளர்ப்பை பொறுத்தது” என்று கொளுத்திப் போட அதிர்கிறது பிக்பாஸ் வீடு.

Views: - 28

0

0