‘வடக்குபட்டி ராமசாமி’ திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இந்தப் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நடிகர் சந்தானம்-இயக்குநர் கார்த்திக் யோகியின் முந்தைய ‘டிக்கிலோனா’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியும் இதற்கு முக்கியக் காரணம். இப்படம் அதன் எண்டர்டெயின்மெண்ட் விஷயங்களுக்காக பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றது.
சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் இப்படத்தில் நடிகர் தமிழ் வில்லனாக நடிக்கிறார். ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேசு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. கவுண்டமணி செந்தில் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான வடக்குப்பட்டி ராமசாமி என்ற பெயரை தலைப்பாக வைத்துள்ளார்கள். இந்த படத்தில் ஈவெ ராமசாமியை கிண்டல் அடிக்கும் வகையில், இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமிதானே என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது வடக்குப்பட்டி ராமசாமி.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சந்தானம் பொங்கல் வைத்து கொண்டாடி உள்ளார். அப்போது, வடக்குப்பட்டி ராமசாமி படத்தை பிரமோட் செய்வது போல ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த சாமியே இல்லைன்னு ஊருக்குள்ள சொல்லிட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தான நீ என்று ஒருவர் கேட்க சந்தானமே, பொறுமையாக சாமிக்கு கற்பூரம் ஏற்றி நான் அந்த ராமசாமி இல்லை என்று சொல்லி கற்பூர தட்டினை ஏந்தி நிற்கிறார். முன்னதாக, தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈவெரா கடவுள் இல்லை கடவுளை வணங்குறவன் காட்டுமிராண்டி என்று சொல்லி இருக்கிறார். அந்த வசனத்தை நினைவூட்டும் வகையில், வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் வசனம் வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெரியாரை குறிப்பிட்டு இந்த வசனம் வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனை கண்ட பலரும் சந்தானத்தை திட்டி தீர்த்து வந்தநிலையில், அவர் இந்த பதிவை நீக்கினாலும், இதனுடைய ஸ்க்ரீன் ஷாட் மற்றும் வீடியோ தற்போதும் வைரலாகி வருகிறது.
மேலும், இப்படி ஒரு நிலையில் PTR சந்தானம் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் மீண்டும் வைரலாக்கி வருகின்றனர். அதில், பேசியுள்ள அவர் ‘ஜக்கி வாசுதேவன், சந்தானம் போன்றவர்கள் தீய சக்தியாக நான் கருதுகிறேன் என்றும், மத நல்லிணக்கத்தை உடைத்து சமுதாயத்தில் மத கலவரத்தை உருவாகும் தீய சக்திகள்’ என்று பேசி இருந்தார்.
இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சினிமா பல சமயங்களில் குப்பையை கூட கோபுரத்தில் ஏற்றிவிடும். அப்படித்தான் கோபுரத்தில் ஏற்றிவிட்ட ஒரு குப்பை காமெடி நடிகர் சந்தானம். இதை மக்கள் மத்தியில் அப்படி கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. சந்தானம் திரைக்கு பின்னால் தன்னை சாதிய வன்மம் பிடித்தவர் என்று காட்டிக் கொள்கிறார். இவர் ஜக்கி வாசுதேவ்வின் சீடராக இருக்கிறார். இதை அவரது பேட்டிகளிலேயே, தெரியவரும் என்று சந்தானம் குறித்து பிஸ்மி பகிரங்கமாக திட்டி உள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.