லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான “கூலி” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்திரைப்படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. மிகவும் கலவையான விமர்சனங்களே இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை தனது தனித்துவமான ஸ்டைலில் மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“எப்படியாவது பேன் இந்தியா லெலவில் ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என்று இந்த படத்தில் தலீவர் நடித்திருக்கிறார். பேன் இந்தியா என்றால் என்ன? நமது மொழியில் நமது நேட்டிவிட்டியில் எடுக்கப்பட்ட படம் இந்தியா முழுவதும் ஹிட் அடிக்க வேண்டும். அதுதான் பேன் இந்தியா ஹிட் படம்.
ஆனால் தலீவர் என்ன புரிந்துவைத்திருக்கிறார் என்றால், பேன் இந்தியா லெவலில் இருக்கிற முக்கியமான நடிகர்களை நமது படத்தில் நடிக்க வைத்தால் பேன் இந்தியா படமாக ஆகிவிடும் என புரிந்து வைத்திருக்கிறார்.
கறி வாங்க காசில்லாதவன்தான் கருவாட்டை கண்டுபிடித்திருக்கணும் என கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. அது போல் கதை எழுத துப்பில்லாதவன்தான் இந்த படத்தின் கதையை எழுதியிருந்திருக்க வேண்டும். படத்தில் எந்த கதாபாத்திரமாவது மனதில் நிற்கிறதா? தலீவர் கதாபாத்திரம் உட்பட?
ஆனால் தலீவருக்கு ஒரு யோகம் இருக்கிறது. அவருடைய எந்த படம் வெளிவந்தாலும் காட்டு மொக்கை என்றுதான் சொல்வார்கள். ஆனால் அவருடைய அடுத்த படம் வரும்போது, இதுக்கு அது எவ்வளவோ தேவலாம் என சொல்லுவார்கள். இப்போ கூட பாருங்கள். ஜெயிலர் நல்ல படமாக ஆகிவிட்டது” என “கூலி” படத்தை மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.