தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அனிருத். ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான், விஜய்யின் லியோ என அடுத்ததடுத்து சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
அடுத்ததாக இந்தியன் 2 , விடாமுயற்சி , தலைவர் 171 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தனுஷின் 3 படத்தின் மூலம் அறிமுகமான இவர், முதல் படம் முதலே மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து, திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துவிட்டார்.
தொடர்ந்து இடைவெளி இல்லாமல் பல ஹீரோக்களுக்கு மாசான வெற்றி கொடுத்து வரும் அனிருத் தான் கடைசியாக இசையமைத்த லியோ திரைப்படத்திற்கு ரூ.8 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து தனது சம்பளத்தை மேலும் சில கோடிகள் உயர்த்திவிட்டார். அதன்படி ரூ. 8 கோடி வாங்கிய அவர் ரூ. 10 கோடியாக சம்பளத்தை உயர்த்தி ஒட்டுமொத்த திரையுல வட்டாரத்தையே வாய்பிளக்க வைத்துவிட்டார்.
என்னதான் அனிருத் தனது பாடல்களை மிகவும் எனர்ஜிடிக் மியூசிக் போட்டு உருவாக்கினாலும் அது பல வெளிநாட்டு மொழி பாடல்களில் இருந்து திருட்டு ஈடுபட்டுள்ளது அப்பட்டமான தெரியவர அதை பலர் விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “
வெளிநாட்டு மியூசிக்கை திருடி தொடர்ந்து அசிங்கப்பட வேண்டியது. ஆனா பேரு மட்டும் Rock Star…. அதுக்கு Robbery Star னு மாத்திக்கலாம். இதெல்லாம் ஒரு பொழப்பு? கொஞ்சநாள் முன்னாடி ஒருத்தன் சொன்னான்… இவன் இளையராஜாவும், ரஹ்மானும் கலந்த கலவையாம். ப்ளடி” என அனிருத்தை நேரடியாகவே மோசமாக திட்டி தீர்த்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக அவர் சொல்வது சரி தானே? என பலர் விமர்சித்துள்ளனர். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அனிருத்தை “இளையராஜாவும், ரஹ்மானும் கலந்து கலவை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.