நடிகை ஸ்ரீதேவி 1980களில் இந்தியா முழுவதும் மிக பிரபலமான நடிகையாக அறியப்பட்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் ,ஹிந்தி போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர்தான் ஸ்ரீதேவி. அதனை தொடர்ந்து 1975க்கு பிறகு கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்தார்.
தமிழில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெய்சங்கர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்த ஸ்ரீதேவி, 1996 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு துபாயில் தனது ஹோட்டல் அறையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இறப்பு செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் சென்னை பங்களாவை மூன்று பேர் அபகரிக்க முயல்வதாக அவரது கணவர் போனி கபூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த மனுவில் , நடிகை ஸ்ரீதேவி 1988 ஆம் ஆண்டு சென்னை ஈசிஆரில் அமைந்துள்ள ஒரு சொத்தை சம்பந்த முதலியார் என்பவரிடம் இருந்து வாங்கினார், 37 வருடங்களாக அந்த சொத்தை அனுபவித்து வரும் நிலையில், தற்போது சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன், மகள் ஆகிய மூவரும் போலியாக வாரிசு சான்றிதழ் பெற்று சொத்தில் தங்களுக்கும் பங்கு உள்ளது என கூறிவருகின்றனர்.
சொத்தின் உரிமையாளர்கள் மயிலாப்பூரில் வசித்து வந்த நிலையில் அவரது வாரிசுகள் என கூறி மூன்று பேரும் தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர், அவர்களது சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என போனி கபூர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போனி கபூரின் விண்ணப்பத்தின் மீது நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தாம்பரம் தாசில்தாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.