விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவரது மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிகர் ரோபோ ஷங்கர் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி, புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். அண்மையில் கூட அனுமதியின்றி அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் ஆளே அடையாளம் தெரியாத வகையில் படு ஒல்லியாக எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இப்படி ஆகிவிட்டார் என ஷாக்கில் உள்ளனர்.
இதனிடையே, சிலர் சரக்கா அல்லது சர்க்கரை நோயா என கலாய்த்தும் வந்தனர். இதுகுறித்து அண்மையில் ஒரு பேட்டியில் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா, தனது கணவர் குறித்து நிறைய வதந்திகள் பரப்பப்படுவதாகவும், அவருக்கு எந்த நோயும் இல்லை என்றும், இது அவர் நடித்து வரும் புதிய படத்திற்கான கெட்டப் என்று தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, நடிகர் ரோபோ ஷங்கரின் நெருங்கிய நண்பரான போஸ் வெங்கட் அவரைப் பற்றி தெரிவித்த பேட்டியில், ரோபோ ஷங்கருக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதும், உடல் எடை குறைந்ததும் உண்மைதான்.
யாருக்கு வேண்டுமானாலும் உடல்நிலை சரியில்லாமல் போகலாம் என்றும், அவரது உடல்நிலை குறித்து நிறைய காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. விரைவில் ரோபோ ஷங்கர் பூரண குணமடைந்து பழையபடி நல்ல நிலைக்கு திரும்பி வருவார் என தெரிவித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.