தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருபவர் நடிகர் போஸ் வெங்கட். இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் அதிகப்படியாக நடித்து இருக்கிறார். இவர் கொடுத்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார். இவரது மனைவி சோனியாவும் சின்னத்திரை நடிகை தான்.
இந்தநிலையில், ஒரே நாளில் நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரரும், சகோதரியும் மரணமடைந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது சகோதரி வளர்மதி மரடைப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார்.
இவரது இல்லம் சென்னை எம்எம்கே பகுதியில் உள்ளது. இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக போஸ் வெங்கட்டின் சகோதரரான ரங்கநாதன் சென்னை வந்துள்ளார். இந்த நிலையில், இறுதிச் சடங்கில் பங்கேற்ற ரங்கநாதன் தன்னுடைய சகோதரியை பார்த்து கதறி அழுதுள்ளார்.
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சகோதரியின் உடல் மீதே அவரும் விழுந்து மரணம் அடைந்தார். இவர்களது இறுதி ஊர்வலம் அறந்தாங்கியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரை உலகினரிடையே, பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆழ்ந்த இரங்கலை இவர்களுக்கு அனைவரும் தெரிவித்து வருகிறார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.