“கலப்படம் இல்லாத Natural Fresh Piece-U..” – பவி டீச்சர் வெளியிட்ட புகைப்படங்கள் – வர்ணிக்கும் ரசிகர்கள் !

Author: Udhayakumar Raman
23 July 2021, 8:46 pm
Quick Share

யூடியூப்பில் ஒளிபரப்பாகி வந்த வெப் சீரிஸ் ஆஹா கல்யாணம், டிவியில வரும் மெகா சீரியல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வைரலாகியுள்ளது இந்த தொடர். இந்த தொடரில் பவி டீச்சராக நடித்து வரும் பிரிகிதா தான் இணையத்தின் லேட்டெஸ்ட் சென்சேஷன். பிரேமம் மலர் டீச்சர்க்கு அப்புறம் அதிகமான ஃபேன்ஸ் இருப்பது பவி டீச்சர்க்கு தான். இப்படி ஒரு அத்தை மகள் நமக்கு இல்லையே என இளைஞர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.

பவியின் ஒவ்வொரு அசைவையும் நம்ம மீமர்கள், மீம்ஸாக்கி கலக்கி வருகின்றனர். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மீம்ஸ்களில் அதிகமாக இடம்பெறுவது பவி டீச்சர் தான். மாஸ்டர் படத்தில் கூட முக்கிய கேரக்டரில் பிரிகிடா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ரியாலிட்டி என்னவென்று எல்லோருக்கும் படம் ரிலீசான பிறகு தெரிந்து விட்டது.

இந்நிலையில், இவர் பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவ் நடிப்பில் உருவாகும் வேலன் என்னும் படத்தில், முக்கிய கதாபாத்திரமாக பிரிகிடா நடிப்பதாக கூறப்படுகிறது.
இணையத்தில் பல நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இவர் Make Up இல்லாமல் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், ” கலப்படம் இல்லாத Natural Fresh Piece-U” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 1414

97

28