“அட விஜய் நண்பர் சஞ்சீவுக்கும், வனிதா விஜயகுமாருக்கும் இப்படி ஒரு உறவுமுறையா ?” – வனிதா சொன்ன சீக்ரெட் !

17 June 2021, 9:10 am
Quick Share

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா மகள் தான் வனிதா, இவரின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். இதில் ஸ்ரீஹரியை கொத்தாக வனிதாவிடம் இருந்து ஆகாஷ் கொண்டு சென்றார். பிறகு இருவரும் விவாகரத்து பெற்றனர். சில வருடங்கள் கழித்து வனிதா 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு மகள் உள்ள நிலையில் இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு கடந்த வருடம் வனிதாவுக்கும், பீட்டர் பாலுக்கும் திருமணம் நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள்.

அதன் பிறகும் Terms ஒத்துவராமல் 4 மாதங்களில் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள். இந்த நிலையில் தற்போது வனிதா விஜயகுமார் Single வாழ்கையை கெத்தாக வாழ்ந்து வரும் நிலையில், சீரியல் நண்பர் ஒருவரின் திருமணத்தில், விஜயின் நெருக்கமான நண்பர் மற்றும் நடிகர் சஞ்சீவ் அவர்களுடன் செல்ஃபி எடுத்து, ” ஆம் இவர் என்னுடைய சித்தி பையன்தான், என் ஃபேவரைட் Brother” என்று பதிவிட,” அட சஞ்சீவுக்கும், வனிதா விஜயகுமாருக்கும் இப்படி ஒரு உறவுமுறையா ?” என்று ரசிகர்களுக்கு பயங்கர ஆச்சர்யம்.

Views: - 541

4

1