நடிகை யாஷிகா ஆனந்துக்கு Car Accident: தோழி சம்பவ இடத்தில் உயிரிழப்பு!!

Author: Aarthi Sivakumar
25 July 2021, 9:45 am
Quick Share

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

இந்தநிலையில் இன்று அதிகாலையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நண்பர்களுடன் சென்ற யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாஷிகா ஆனந்த் சென்ற கார் நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Views: - 318

1

0