தன்னை விட 30 வயது அதிகமான நடிகருடன் ரொமான்ஸ் செய்ய கேத்ரின் கேட்ட சம்பளம் ! புகைச்சலில் சக நடிகைகள்..!

4 September 2020, 10:14 pm
Quick Share

கேத்ரின், மெட்ராஸ் திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Part Time – ஆக தமிழிலும், Full-time ஆக தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், கடந்த வருடத்தில் இவர் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம். ஒரு காலத்தில் அல்லு அர்ஜுன் போன்ற இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் இப்போது தன்னுடைய அப்பா வயது ஹீரோவான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.

அந்த படத்திற்கு வாங்கியிருக்கும் சம்பளம் ரவுண்டா ஒரு கோடி ரூபாயாம். அதனால் தன்னை விட 30 வயது அதிகமான நடிகர் என்றாலும் பரவவில்லை, டூயட் பாட நான் தயார் என பச்சைக்கொடி காட்டியிருக்கிறார். இதன் மூலம் கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் join ஆகிவிட்டார். இது சக நடிகைகளின் மத்தியில் வயிற்று எரிச்சலை கிளப்பி உள்ளது.

Views: - 0

0

0