FDFS பாத்து விஜய்யின் மாஸ்டரை கொண்டாடி தீர்த்த பிரபலங்கள்!

13 January 2021, 11:50 am
Quick Share


விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர்.


விஜய் நடித்த மாஸ்டர் படம் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. அதுவும், திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதுவே ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்கும் திரையரங்கில் ஒரு மாஸ் ஹீரோவின் படம் வெளியாவது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக எந்த மாஸ் நடிகரின் படமும் திரையரங்கில் வெளியாகவில்லை.


மாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், பட்டாசு வெடித்தும், மேள தாளத்துடனும், விஜய் பேனர், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சி கொண்டாடி வருகின்றனர். திரையரங்கு முழுவதும் விசில் சத்தம் காதை கிழிக்கும் அளவிற்கு ரசிகர்கள் விஜய்யின் மாஸ்டரை பார்த்து ரசிக்கின்றனர்.


சரி ரசிகர்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், சினிமா பிரபலங்கள் இவர்களை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறார்கள். ஆம் இசையமைப்பாளர் அனிருத், நடிகை கீர்த்தி, நடிகை மாளவிகா மோகனன், சுரேஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சாந்தணு, அர்ஜூன் தாஸ் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் விஜய் மாஸ்டர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்து மகிழ்ந்துள்ளனர்.


கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது: ஒரு வருடம் கழித்து மீண்டும் தியேட்டருக்கு வந்ததில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்பதை விவரிக்க முடியவில்லை. மாஸ்டருக்காக வந்தேன். இது மாஸ்டர் பொங்கல் டா என்று குறிப்பிட்டுள்ளார்.


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தணு, மாளவிகா மோகனன், நாசர், அர்ஜூன் தாஸ் என்று ஏராளமான பிரலங்கள் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3000 திரையரங்குகளில் மாஸ்டர் படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0