ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பெற்ற பிரபலங்கள் – யார் யார்ன்னு பாருங்கள்!

Author:
5 அக்டோபர் 2024, 3:40 மணி
twin celebrities'
Quick Share

திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் திருமணமானவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் அவ்வளவாக ஆர்வமே காட்ட மாட்டார்கள். காரணம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கான அழகு, இளமை எல்லாம் போய்விடும்.

அதனால் தொடர்ந்து சினிமாவில் தங்களால் பயணிக்க முடியாது. திருமணமாகி குழந்தை பெற்றுவிட்டோம் என்று தெரிந்தாலே மார்க்கெட் சரிந்து விடும். பட வாய்ப்புகளும் யாரும் கொடுக்க மாட்டார்கள் என்ற ஒரு எண்ணத்திலே பெரும்பாலான நடிகைகள் குழந்தை பெற்றுக் கொள்வதே தள்ளிப் போடுகிறார்கள்.

சில நடிகைகள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம். ஆனால் குழந்தை வேண்டும் என விருப்பப்படுபவர்கள் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த நிலையில் குழந்தையை வேண்டாம் என பல நடிகைகள் இருக்கும் சமயத்தில் இரட்டை குழந்தைகளை பெற்ற பிரபலங்களை பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட பிரதீப் மற்றும் சான்ட்ரா தம்பதிகளுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பல வருடங்கள் கழித்து பிறந்தது. நடிகர் பரத்திற்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசி சீரியலில் நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் சந்தோஷத்திற்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. அதேபோல் 2000 காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நமீதாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னுடைய நீண்ட நாள் காதலரான விரேந்தர் சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

இவருக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதேபோல் காதலில் சொதப்புவது எப்படி? டிக் டிக் டிக் டிக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான குணசத்திர நடிகராக பார்க்கப்பட்டு வந்த நடிகர் அர்ஜுனனுக்கு ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

இதில் அவரது மகன் கவின் நடிப்பில் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரது மகள் லியோ திரைப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பல வருடங்களாக சன் டிவி ஓடிக்கொண்டிருந்த சந்திரலேகா சீரியலில் நடித்து பெரும் புகழ்பெற்றவர் தான் ஸ்வேதா. இவருக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: என்ன இதுக்கு தான் கூப்பிட்டியா? தனுஷை முகத்திற்கு நேரா திட்டிய சரண்யா பொன்வன்னன்!

அதேபோல் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பேமஸான சிங்கப்பூர் தீபனுக்கும் ஒரு மகள் ஒரு மகன் என இரட்டைக் குழந்தைகள் இருக்கிறார்கள். தென்னிந்திய சினிமாவில் டாப் நட்சத்திர நடிகியான நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். இப்படியாக பல பிரபலங்கள் இரட்டை குழந்தைகளுடன் மிகுந்த மகிழ்ச்சியோடு குடும்பத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 236

    0

    0