RRR படத்தின் ட்ரெய்லரை பார்த்து ராஜமவுலிக்கு ‘போன்’ போட்ட Celebrity : ஒன்று சேர்ந்த 5 மொழி பிரபலங்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 December 2021, 5:08 pm
RRR - Updatenews360
Quick Share

பாகுபலி பிரபலம் ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாணண்டமாக உருவாகியுள்ள ஆர் ஆர் ஆர் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

இந்த படத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியா பட்,அஜய் தேவ்கன், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளர். டிவிவி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. தமிழ் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், போர்ச்சுக்கீஸ், கொரியா, துருக்கி, ஸ்பானிஸ், சீன உள்ளிட்ட 12 மொழிகளில் வரும் ஜனவரி 7ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிடடுள்ளது.

RRR trailer: Jr NTR fights off tiger, promises to give up life for  'brother' Ram Charan; Alia Bhatt gets no lines. Watch - Hindustan Times

இந்த படத்தில் நட்பை பற்றி பாடல் எழுத ஐந்து மொழி பாடகர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த பாடலின் வரிகளை தெலுங்கில் ஸ்ரீ வெண்ணிலா சீதாராம சாஸ்த்திரி, தமிழில் மதன் கார்க்கி, இந்தியில் ரியா முகர்ஜி, கன்னடத்தில் ஆசாத் வரதராஜ், மலையாளத்தல் மான்கொம்பு பாலகிருஷ்ணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

Rajamouli's RRR gets a release date | Entertainment News,The Indian Express

அதே போல பாடலை தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் விஜய் யேசுதாசும், இந்தியில் அமித் திரிவேதியும், தெலுங்கில் ஹேமச்சந்திராவும், கன்னடத்தில் யசின் நசரும் பாடியுள்ளனர். படத்திற்கு பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.

Alia Bhatt-Ajay.Devgn's RRR to now clash with their Gangubai Kathiawadi in  January - Hindustan Times

இந்த நிலையில் இன்று வெளியான ட்ரெய்லரை பார்த்து பாலிவுட் இயக்குநர் ஆயன் முகர்ஜி, RRR படத்தின் ட்ரெய்லர் அருமையாக உள்ளதாகவும், ட்ரெய்லரை பார்த்து உற்சாகமடைந்துள்ளதாகவும், வேறு எந்த வேலையும் செய்ய தோன்றவில்லை என கூறியுள்ளார். படத்தை பார்க்க குழந்தை போல ஆவலாக உள்ளதாக கூறியுள்ள அவர், சினிமாவின் மாஸ்டர் ராஜமௌலி என புகழாரம் சூட்டியுள்ளார்.

First Song of RRR, 'Dosti,' Starring Ram Charan and Jr NTR Out on  Friendship Day

இதே போல பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே, சொல்ல வார்த்தைகளே இல்ல, படக்குழுவுக்கு வாழ்த்துக்கள், ட்ரெய்லரை பார்த்து பிரம்மிப்பாக உள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Views: - 255

2

1