மிஷ்கின் முதல் கார்த்திக் சுப்புராஜ் வரை மாஸ்டரை பார்த்து பிரமித்த பிரபலங்கள்!

16 January 2021, 5:18 pm
Master 1 - Updatenews360
Quick Share

மாஸ்டர் படம் பார்த்து மிஷ்கின், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.

பிகில் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமணியன், பிரிகிதா, கௌரி கிஷான் என்று ஏராளனமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், மாஸ்டர் படம் பார்த்த இயக்குநர்கள் மிஷ்கின் உள்பட கார்த்திக் சுப்புராஜ் வரை அனைவரும் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

மிஷ்கின்

தனது உதவி இயக்குநர்கள் உடன் இணைந்து இயக்குநர் மிஷ்கின் மாஸ்டர் படத்தை பார்த்து ரசித்துள்ளார். திரையரங்குகளில் விசில் சத்தம் காதை கிழிப்பதை தனது கண்ணால் பார்த்து மகிழ்ந்துள்ளார். விஜய் அழகானவர், ஸ்டைலானவர் என்றும் அவரை பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் வில்லத்தனத்தால் அதிகளவில் ஈர்க்கப்பட்டுள்ளார்.

சுசீந்திரன்
துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து, விஜய் நடித்த மாஸ்டர் படம் தான் தனக்கு பிடித்த படம் என்று சுசீந்திரன் கூறியுள்ளார். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் பாராட்டியதோடு, விஜய் சேதுபதியின் நடிப்பு திறமையைப் பார்த்து வியந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ்
விஜய்யின் நெருங்கிய நண்பர் ராகவா லாரன்ஸ். விஜய்யின் எல்லா படங்களையும் திரையரங்கில் பார்த்து மகிழக்கூடியவர். விஜய்யின் மாஸ்டர் படத்தையும் வெளியான 2ஆவது நாளில் பார்த்து மகிழ்ந்துள்ளார். இதையடுத்து, விஜய்யின் கடின உழைப்பு மற்றும் அவரது லுக் ஆகியவற்றால் தான் ஈர்க்கப்பட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தான் எதிர்பார்த்ததைவிட படம் மாஸாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்வத் மாரிமுத்து
மாஸ்டர் படம் தளபதி விஜய்க்காகவே ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து படம் பார்த்துள்ளார். முதல் பாதியைப் போன்று 2 ஆம் பாதியையும் ரசித்ததாக கூறியுள்ளார். கிளைமேக்ஸ் காட்சியின் போது ரசிகர்கள் கொடுத்த ஆரவாரத்தைக் கண்டு வியந்துள்ளார். இறுதியாக லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோரது கடின உழைப்பை வெகுவாக பாராட்டியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ்
நீண்ட நாட்களுக்குப் பிறகு மாஸ்டர் படத்திற்காக வருவது மனதை கவரும் வகையில் இருப்பதாக தான் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார். ரசிகர்களை திரையரங்கிற்கு அழைத்து வந்த விஜய் மற்றும் அவரது மாஸ்டர் டீமை பாராட்டியுள்ளார். மாஸ்டர் ஒரு மாஸ் எண்டர்டெயினர் என்று சுட்டிக்காட்டிய கார்த்திக் சுப்புராஜ், ரசிகர்களை மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வந்து பார்க்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். கூடிய விரைவில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 9

0

0