தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை ரோஜா – வருத்தத்தில் ரசிகர்கள் !

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2021, 9:27 am
Roja - Updatenews360
Quick Share

செம்பருத்தி படம் வெளியானதும் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, பிரபுதேவா, சரத்குமார் இப்படி பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தார் நடிகை ரோஜா .

அடுத்து தெலுங்கு திரையுலகம் இவருக்கு Red Carpet விரித்தது. அப்படியே ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். பிறகு செல்வமணியை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வாழ்ந்தார். இவர்களது காதல் தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட பெரும் கதையாகும்.

இந்நிலையில் அங்கேயே MLA ஆனார். ரோஜா தற்போது தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தற்போது, இவரின் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவரது உடல் நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இப்போது ரோஜா நன்றாக இருக்கிறார்.அவருக்கு இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்து, அவர் குணமடைந்து வருகிறார். இதற்கு முன் பல முறை தள்ளிப் போட்டிருக்கிறார்” என்றார். இவர் உடம்புக்கு என்ன ? எதனால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அவரது உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பிரார்த்தனைகளை பகிர்ந்து வருகின்றனர்.

Views: - 147

3

2