என் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி.. விஜய் உருவத்தை பச்சை குத்திய நடிகர்.. (வீடியோ)!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2024, 1:55 pm

நடிகர் விஜய் தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகிறார், இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அவர் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியும் முடித்துவிட்டார்.

விஜய் உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திய தாடி பாலாஜி

ஆளுங்கட்சிகளான பாஜக மற்றும் திமுகவை விமர்சித்து அவர் பேசிய கருத்துக்கள் இன்று வரையும் தமிழக அரசியல் கட்சிகள் முணுமுணுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் கட்சியில் ஆர்வத்தோடு திரைப் பிரபலங்கள் இணைந்தும், ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Thaadi Balaji Tattooed Vijay image in his chest

அதில் தாடி பாலாஜி முக்கியமானவர், விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்ததும், ஆதரவை தெரிவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

தற்போது ஒரு படி மேல் போய், விஜய்யின் உருவத்தை தனது மார்பில் பச்சைக் குத்தி கொண்ட காணொளியை பகிர்ந்து, என் நெஞ்சில் குடியிருக்கும் தளபதி என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!