அறியாமல் செய்த தப்பால் சினிமா வாய்ப்பை தவறவிட்ட பிரபலங்களின் லிஸ்ட் இதோ..!

Author: Vignesh
5 October 2022, 8:15 pm
Quick Share

சினிமாவை பொறுத்தவரையில் கிடைத்த கேப்பில் வாய்ப்பு அமைந்தால் அதை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்ற இலக்கணம் உண்டு. அப்படி பல நட்சத்திரங்கள் நடிக்க ஆரம்பித்த அதே ஆண்டிலேயே உச்சத்தை தொடுவார்கள். அப்படி உச்சத்தை தொட்டும் தாங்கள் செய்த தவறால் வாய்ப்பை இழந்து காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.

நடிகை அசின்

அப்படி ஆரம்பத்தில் தமிழில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து உச்சம் தொட்டவர் நடிகை அசின். அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ரொமான்ஸ் செய்த அசின் பாலிவுட் பக்கம் சென்று சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்து கிசுகிசுக்கப்பட்டார். ஒரு சில பிரச்சனையால் தமிழ் சினிமாவில் அப்போது தமிழ் நடிகர் நடிகைகள் ஸ்ரீலங்காவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளக்கூடாது என்ற ஆணை இருந்தது. அதை மீறி அசின் ராஜபக்ச குடும்பத்துடன் விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார். இதனால் தமிழில் ஒதுக்கப்பட்டு விலக்கிவிடப்பட்டார்.

அமலா பால்

நடித்த சில படங்களிலேயே சிறப்பான நடிப்பை அளித்து நல்ல வரவேற்பு பெற்றவர் அமலா பால். மைனா படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். அதன்பின் திருமணம், விவாகரத்து, மதுபார்ட்டி, படுக்கயறை காட்சி போன்றவற்றில் சிக்கி வாய்ப்பை தொலைத்தார். தற்போது மீண்டும் எண்ட்ரி கொடுக்க தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்து வருகிறார்.

வடிவேலு

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான திகழ்ந்து குறுகிய காலத்தில் அடையமுடியாத வளர்ச்சியை பெற்றார் வடிவேலு. இடையில் அரசியல், விஜயகாந்தை எதிர்த்து நடந்து கொண்டது, ரெட்கார்ட் என்று சினிமாவில் இருந்து விலக்கப்பட்டார். தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் மீண்டும் களமிரங்கவுள்ளார்.

அப்பாஸ்

ஜாக்லெட் பாய் என்று கூறப்படும் அப்பாஸ், முன்னணி நடிகராக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டார். ஆனால் ஒருசில படங்களை ஒதுக்கியதால் வாய்ப்புகளை இழந்து காணமல் போனார். அமெரிக்காவில் செட்டிலாகி சினிமாவை விட்டு விலகி வருகிறார்.

இவர்களை போல் பல நட்சத்திரங்கள் சினிமாவில் வாய்க்கொடுத்து தேவையில்லாததை பேசியும் செயல்படுத்தியும் காணாமல் சென்றுள்ளனர்.

Views: - 145

0

0