Luxury கார் வாங்கி குடும்பத்துடன் கொண்டாடிய Sun TV சீரியல் நடிகை – என்ன விலை தெரியுமா?..

Author: Vignesh
6 June 2024, 3:31 pm

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் தொகுப்பாளினிகளும் அதிக அளவு மக்களிடையே பேமஸ் ஆகி வருகின்றனர். அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வரிசையில் தற்போது சைத்ரா ரெட்டியும் இணைந்துள்ளார்.

மேலும் படிக்க: மூளை நரம்பில் ஏற்பட்ட பிரச்சனை.. கை விரித்த டாக்டர்; வேதனையை பகிர்ந்த விஜய் டிவி நடிகை..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து இருந்தார் சைத்ரா ரெட்டி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். ரக்கட் என்ற படத்திலும் நடித்துள்ளார். முக்கிய ரோலில் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த சைத்ரா, அஜித்தின் வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சமீபத்தில் தான் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Chaitra-Reddy-updatenews360

இவருக்கு ஏற்கனவே ரசிகர் வட்டம் உருவாக்கியிருந்த நிலையில், சமீபமாக இன்ஸ்டாகிராமால் இளசுகளும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் போடும் போஸ்ட்டுகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். முன்னதாக, சைத்ரா ரெட்டி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கூடிய சீக்கிரமே 50 மாடுகளை வாங்கி சொந்தப் பண்ணையை ஆரம்பிக்கப் போவதாக கூறி மாட்டிற்கு பால் கரக்கும் வீடியோவை பகிர்ந்து இருந்தார்.

தற்போது, சைத்ரா ரெட்டி நடிக்கும் கயல் சீரியல் டிஆர்பியில் டாப் 2ம் இடத்தில் இருந்து வருகிறது. தற்போது, சைத்ரா ரெட்டி ஒரு சொகுசு காரை வாங்கி உள்ளார். மெர்சிடஸ் பென்ஸ் இ கிளாஸ் காரை தான் அவர் வாங்கி இருக்கிறார். அதன் விலை சுமார் 1.2 கோடி. அவர் குடும்பத்துடன் சென்று அந்த காரை வாங்கி இருக்கும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்.

Chaitra Reddy
Chaitra Reddy

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 258

    0

    0