“வளர்ப்பு சரியாய் இருந்தா, இப்டிலாம் தோணாது” இணையத்தில் ரசிகருடன் மல்லுக்கட்டும் சாந்தனு

Author: kavin kumar
25 August 2021, 9:13 pm
Quick Share

இணையத்தில் அவ்வபோது சினிமா நட்சத்திரங்களுக்கும், ரசிகர்களுக்கும் பிரச்சனை ஏற்படுவது வழக்கம். தற்போது நடிகர் சாந்தனு அந்த வரிசையில் சேர்ந்துள்ளார்.

பாலிவுட்டை போலவே தமிழ் சினிமாவிலும் வாரிசு நடிகர் நடிகைகள் உள்ளனர். அதில் ஒருவர் தான் சாந்தனு. நடிகர் மற்றும் இயக்குநர் பாக்யராஜின் மகனான சாந்தனு சக்கரகட்டி, உட்பட பல படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகவும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் எதுவும் ஓடவில்லை. அதன்பின் விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார். ஆனால் அதிலும் மிகவும் கம்மியான காட்சிகளிலே வந்ததால் ரசிகர்களின் கேலிக்கு உள்ளானார்.

அதற்கு சாந்தனு “ஒரு சீனும், ஒரு படம், அந்த படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே எனக்கு பெருமை தான் ” என பதில் அளித்து கேலிக்கு முற்றுப்புள்ளி கொடுத்தார். சமீபத்தில் நடிகர் சாந்தனு ஹரிஷ் கல்யாண் டேக் செய்து “உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல ஏன் என்னை ஏமாற்றினீங்க, பதில் செல்லுங்க” என பதிவிட்டுள்ளார். இது முருங்கைக்காய் சிப்ஸ் படத்திற்காக ப்ரோமோசனுக்காக தான் என எல்லாரும் நினைத்தனர். இந்தப் பதிவிற்கு ரசிகர் ஒருவர் ஒழுங்கா படம் நடிச்ச இதெல்லாம் தேவைப்படாது என்று கமென்ட் அடித்தார்.

இதற்கு பதிலளித்த சாந்தனும் மூளை வளர்ச்சி இருந்தால் இப்படி இன்னொருத்தரை குறை சொல்லத் தோணாது என பதிலடி கொடுத்தார். அதற்கு அந்த நபர், செய்யுற தொழிலில் சுத்தமும் பக்தியும் இருந்தால் மனசு இப்படி மலிவா யோசிக்காதே போ ராஜா போ என கமெண்ட் அடித்தார். இதற்கு சாந்தனு, வளர்ப்பு சரியாய் இருந்தால் இன்னொருத்தரை பற்றி விசாரிக்காமல் விமர்சிக்க தோணாது கிளம்பு தம்பி கிளம்ப என பதிலடி கொடு‌த்து‌ள்ளா‌ர்.

Views: - 958

15

4