தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜய் அவர்களை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் அவர்கள் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் பேட்டிகளில் பங்கேற்று தங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து வருதத்துடன் பேசி வருகிறார்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கமண்டல நாக நதி ஆற்றுப்பாலம் அருகே உள்ள புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயத்தில் விஜயின் தந்தை சந்திரசேகர் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிபோது, செய்தியாளர் ஒருவர் விஜயின் எதிர்காலம் பற்றி கேள்வி கேட்க, அதற்கு SAC, விஜயின் எதிர்காலத்தைப் பற்றி தன்னிடம் ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்றும், அதை விஜய் இடம் கேளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அரசியலில் இறங்கிய நடிகர்கள் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது என்று கேட்டதற்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து வேகமாக விஜயின் தந்தை கிளம்பி சென்று விட்டார். இதனிடையே, விஜய் குறித்து அவர் பேசியது வைரலாக பரவி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.