சினிமாவில் அழகான ஜோடி பொருத்தம் உள்ள நடிகர் நடிகைகள் சேர்ந்து நடித்து ரசிகர்கள் மனதில் நிஜ காதலர்களாக மனம் கவர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தேவயானி. குழந்தை போன்ற குணம் கொண்ட அவர் பவ்யமாக கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.
தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருத்தணிக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். அதற்கு சிங்கமுத்துதான் சாட்சி கையெழுத்து போட்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனை தொடர்ந்து தேவயானியின் அம்மா ஆட்களை கூட்டிக் கொண்டு மகளை அழைத்து செல்ல வந்தார். அப்போது இருவரும் விக்ரமின் வீட்டிற்கு சென்று உதவி கேட்டனர். விக்ரம் பஞ்சாயத்து செய்து வைக்க, பிரச்சினை முடிவுக்கு வந்து இன்று வரை அவர்கள் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்” என்று பேசினார்.
இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு தேவயானிக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைய சீரியலின் பக்கம் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். கோலங்கள் என்ற தொடரில் நடிக்க மிகப்பெரிய பிரபலத்தை அவருக்கு கொடுத்தது.
விக்ரம் மற்றும் தேவயானியை வைத்து விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற திரைப்படத்தை இயக்கியபோது, அந்த படப்பிடிப்பில் தான் ராஜகுமாரின் அன்பு அமைதி உழைப்பு பார்த்து தான் தேவயானிக்கு ராஜகுமார் மீது அதிக காதல் ஏற்பட்டதாகவும், ராஜகுமாரின் மீது இருந்த நம்பிக்கையே அவரை திருமணம் செய்ததற்கு காரணம் என தேவயாணி தெரிவித்து உள்ளார்.
அதன்பிறகு தேவயானி குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். ஆனால் தற்போது வரை தேவயானியின் தம்பி நகுல் ராஜகுமாரனிடம் பேசியதே கிடையாது என்றும், அதுமட்டுமல்லாமல் நகுல் தேச விரோதியைப் பார்ப்பதைப் போல ராஜகுமாரனை வெறியோடு பார்ப்பதாகவும், மேலும், தேவயானி குடும்பத்தில் யாரும் தன்னிடம் பேசுவதில்லை என ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.