சினிமா / TV

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை

2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி தமிழ் சினிமா வட்டாரங்களில் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த புகாரை தொடர்ந்து வைரமுத்துவுக்கு திரைப்பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட இல்லாமலே போனது. 

அதனை தொடர்ந்து டப்பிங் யூனியனில் முறையாக சந்தா செலுத்தவில்லை என்ற காரணத்தால் அப்போது  யூனியனின் தலைவராக இருந்த ராதா ரவி, சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்து தடை செய்தார். ஆனால் ராதா ரவியின் மீது தான் Me Too புகாரை எழுப்பியதால்தான் அவர் தன்னை டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றினார் என சின்மயி குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து சின்மயி தமிழ் திரைப்பாடல்கள் பாடுவதற்கும் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு சின்மயி எந்த தமிழ் திரைப்பாடல்களையும் பாடவில்லை. 

கம்பேக் கொடுத்த சின்மயி

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை சின்மயி பாடியது ரசிகர்கள் பலரையும் ஈர்த்தது. அவரை மீண்டும் தமிழ் திரைப்பாடல்களை பாட வைக்க வேண்டும் என ஆதரவு குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் கே எஸ் அதியமான் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் டி.இமான், சின்மயியை பாட வைத்துள்ளார். 

இது குறித்து டி.இமான் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் சின்மயியுடன் தான் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். கே எஸ் அதியமான் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்திற்காக டி இமான் இசையில் சிநேகன் வரிகளில் இப்பாடலை  பாடியுள்ளார் சின்மயி. இதன் மூலம் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து சின்மயி தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ளார்.  இச்செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

55 minutes ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 hour ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 hour ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 hour ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 hours ago

தோல்வி பயத்தால் முருகன் மாநாட்டுக்கு இடையூறு.. CM மற்றும் அமைச்சர் மீது தமிழக பாஜக குற்றச்சாட்டு!

துரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக…

3 hours ago

This website uses cookies.