Blockbuster இயக்குனருடன் படம் பண்ண துடித்த தல அஜித்… அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே..!

20 June 2021, 8:26 pm
Quick Share

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக உருமாறி இருக்கிறார் தல அஜித்குமார். ஆரம்பத்தில் ஏகப்பட்ட அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்து தனது கடின உழைப்பால் மேலே வந்தார். கார் ரேஸர் ஆக இருந்தபோது ஏற்பட்ட விபத்தில், அவர் உடம்பில் அதிகமான காயங்கள் ஏற்பட்டு நிறைய ஆபரேஷன்கள் செய்யப்பட்டன.

பின் மீண்டு வந்தவர், நடிப்பு மட்டுமில்லாமல் கார் ரேஸர், பைக் ரேசர், ட்ரோன் பற்றி மாணவர்களுக்கு சொல்லித் தரும் ஆசிரியர் என பலதுறைகளில் வெற்றி பெற்று வருகிறார். சமீப காலமாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஈடுபாடுடன் இருந்து வருகிறார்.

மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஐயப்பன் கோஷியும். பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகிய நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சச்சி இயக்கினார். இந்த படம் கேரளாவில் மட்டும் இல்லாமல் தமிழகத்திலும் பெரும் வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் தல அஜித் ஐயப்பனும் கோசியும் படம் வெளிவந்த போது இந்த படத்தின் இயக்குனர் சச்சியை அழைத்து படத்தைப் பற்றி பாராட்டினார் எனவும் அவருடன் சேர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அஜித்திற்காக ஒரு கதையை சசி தயார் செய்ய இருந்ததாகவும் அந்த இந்த கதை தனுஷ்கோடியில் நடக்க இருப்பதாக எழுதப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் சச்சி சில நாட்களுக்கு முன் உயிரிழந்துவிட்டார்.

தற்போது போனி கபூரின் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜீத் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படம் தொடங்கப்பட்டு இரண்டு வருடம் ஆகியும் இன்னும் எந்த விதமான அப்டேட்டும் வரவில்லை என ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். மேலும் இந்த செய்தி அவர்களை மேலும் வாட்டுவதாக இருக்கிறது.

Views: - 246

2

0