காதலியுடன் உடலுறவு வைப்பது காமெடியா..? இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு கோமாளி பட நடிகை கேள்வி..!

Author: Vignesh
8 December 2022, 1:30 pm
love today -updatenews360
Quick Share

லவ் டுடே திரைப்படம் வெளியானது முதலே நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் படம் ஒருதலை பட்சமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் விமரிசித்து வருகின்றார்.

இந்நிலையில் பிரபல ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.ஆனந்தி இப்படத்தில் வரும் காட்சி ஒன்றை பற்றி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் வளர்ந்து கொண்டிருப்பவர்.

rj-anandhi - updatenews360

இவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு தான் இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் லவ் டுடே.

லவ் டுடே படத்தில் பிரதீப் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல ரவி, நடித்திருக்கிறார்கள். ரவி, என்டர்டைன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

lovetoday-updatenews360

லவ் டுடே படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் சத்யராஜின் மகளாக இவானா நடித்திருக்கிறார்.

லவ் டுடே பட ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன் நடித்து இருக்கிறார். இவானா- பிரதீப் ரங்கநாதன் இருவரும் காதலிக்கிறார்கள். இதை இரு வீட்டிலும் சொல்ல நினைக்கிறார்கள். இதை இவானாவின் இதை சத்யராஜை காண பிரதீப் ரங்கநாதன் வருகிறார்.

anandhi - updatenews360

அவரிடம் தங்களுடைய காதலை பற்றி பேசுகிறார் பிரதீப். உடனே சத்யராஜ் இருவருக்கும் ஒரு நிபந்தனையை வைக்கிறார். அதாவது, நீங்கள் இருவரும் உண்மை காதலர்கள் என்றால் நீங்கள் இருவரும் ஒரே ஒரு நாள் மட்டும் உங்களுடைய செல்போன்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

பின் இருவரும் அந்த நிபந்தனையை ஒற்றுக் கொண்டு செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அந்த ஒரு நாள் கதை தான் படத்திற்கு முக்கிய திருப்பமாக அமைகிறது. இதனால் படத்திற்கு இருவருக்கும் படத்திற்கு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதையெல்லாம் சமாளித்து இந்த காதலில் அவர்கள் க்ளைமாக்ஸ் வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இன்றைய கால காதல் எப்படி இருக்கிறது? என்பதை தெளிவாக படத்தில் காண்பித்து இருக்கிறார் இயக்குனர்.

இந்நிலையில், லவ் டுடே படமானது நல்ல விமர்சனங்ககளை பெற்று வந்தாலும் ஆண்களின் நச்சு நடத்தையை ரொமாண்டிசைஸ் செய்யும் விதத்திற்காகவும், பெண்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் படியும் இருப்பதாக பலராலும் விமர்ச்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பிரபல ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.ஆனந்தி புத்தகங்களை மதிப்பாய்வு செய்யும் யூடியூப் சேனலின் உரிமையாளரான தன்னுடைய விமரிசனத்தை வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான “கோமாளி” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படியிருக்கு போதுதான் தன்னுடைய வீடியோ பதிவில் “லவ் டுடே” படத்தில் வரும் ஒரு காட்சியை விமர்சித்திருந்தார். அவர் கூறியதாவது நீ எனக்கும் என்னுடைய சகோதரிகளுக்கும் தவறான செய்திகளை பரப்பவில்லை அதனால் உன்னை நம்புகிறேன்.நீ காதலிக்கும் பெண்ணுடன் உடலுறவு செய்ய விரும்பிகிறாய் ஆனால் அந்த அந்தரங்க விஷயத்தை உன்னுடைய நம்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறாய். இதனை நாங்கள் எப்படி நகைச்சுவையாக எடுத்துக்கொள்வோம் என்று எப்படி எதிர்பார்த்தீர்கள்.

lovetoday-updatenews360

அப்படியே நாங்கள் அதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும் உங்களுடைய ஆழ்மனதில் நீங்கள் செய்வது தவறு என்று தெரியவில்லையா?? மேலும் இதை போன்ற விஷியங்களை பெண்கள் இன்னும் எத்தனை காலம் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள். இந்த நகைச்சுவைக்கான விலை என்ன என்று கேட்டிருந்தார் ஆர்.ஜே.ஆனந்தி. மேலும் இவர் இந்த பதிவை “காமசூத்ரா” புத்தகத்தை மதிப்பாய்வு செய்யும் போது அந்த விடீயோவில் கூறியிருந்தார்.

Views: - 209

0

0