“17 வயசுல 120 ரூபாயுடன் ஹீரோ ஆகனும்னு சென்னை வந்தேன்” வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகரின் சோக நிலை..!

Author: Vignesh
25 December 2022, 4:15 pm
Vadivelu-updatenews360-3
Quick Share

தமிழ் சினிமாவில் பல்வேறு காமெடி நடிகர்கள் ரசிகர்களின் மனதில் நீங்காதது இருந்து வருகின்றனர். அந்த வகையில், வைகை புயல் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் விஜய் கணேஷ். சமீபத்தில் பிரபல சேனலுக்கு இவர் பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் தன்னுடைய திரை வாழ்கை குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பேசியிருந்தார்.

vijay ganesh - updatenews360

அப்போது அவர் பேசியதாவதுது, “17 வயதில் சென்னை வந்தேன். எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி. எனக்கு சிறு வயத்திலிருந்தே சினிமாவின் மீது அதிகமாக ஆசை இருந்தது. அதன் காரணமாக நன்பர்களின் தூண்டுதலின் பேரில் என்னுடைய 17 வயதில் 120 ரூபாயுடன் சென்னைக்கு வந்தேன். சென்னை வந்ததும் எனக்கு அவ்வளவு இன்பம். அதன்பிறகு, அவ்வளவு ஓடி அலைந்தும் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. கையில் இருந்த பணம் எல்லாம் முடிந்து விட்டது.

நான் என்ன செய்வதென்று கேகே நகர் பேருந்து நிலையம் அருகே இருந்த ஒரு கடையில், ஒரு அம்மாவிடம் சென்று வேலை ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். என்னை மேலும் கீழும் பார்த்ததும் திருடன் போல தெரிந்தது போல. பிளாட் பாரத்தில்தான் தூங்கினேன். அவர் உடனே என்னை சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டு 2 பரோட்டா சாப்பிட கொடுத்தார். நான் அழுதுகொண்டே சாப்பிட என்னுடைய நிலைமை புரிந்து உன்னுடைய பொருட்களை எடுத்து கொண்டு வா எனக் கூறினார்.

vijay ganesh - updatenews360

நானும் வேகமாக சென்று பேட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு வந்த போது எனக்கு வேலை கொடுத்தார். பின்னர் நான் எங்கே தங்குவது என்று கேட்க இங்கே தான் என்று கூற பிளாட் பாரத்தில் தான் என்னுடைய சென்னை வாழ்கை ஆரம்பித்தது. பின்னர் பல முயற்சிக்கு பிறகு சினிமாவில் அடியால், வில்லன் என சிறிய சிறிய வேடங்கள் கிடைத்தது. அப்போதெல்லாம் நடிப்பதற்கு 200, 300 ருபாய் தான் கொடுப்பார்கள்.

y g mahendran - updatenews360

அதற்கு பிறகு ஒய். ஜி. மகேந்திரன் சீரியலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த சீரியலில் காமெடி கதாபாத்திரத்தில் ஒருவர் தேவை பட்டார். அப்போது ஒய். ஜி. மகேந்திரன் என்னை அழைத்து மீசையை எடுக்கச் சொன்னார். நான் பயந்து இந்த மீசையின் மூலம்தான் வில்லனாக நடிக்கவே வைக்கிறார்கள் இதை எப்படி எடுப்பது எனக் கூற பின்னர் மீசை எடுத்து வந்து அந்த காட்சியில் நடித்தேன் அனைவரும் பாராட்டினார்கள். பின்னர் நடிகர் விவேக்குடன் சில காலங்கள் நடித்தேன். அப்போது வடிவேலுக்கும் விவேக்கிற்கும் பெரிய போட்டி இருந்தது.

vivek updatenews360

ஒரு நாள் பிலிம் சிட்டியில், செல்வ சேகரன் இயக்கத்தில் “புத்தம் புது பூவே” என்ற படம் எடுத்தாரகள். அங்கு வடிவேலு இருக்கிறார் என்று போண்டா மணி தகவல் கொடுத்தார். அங்கு செல்ல சோடாவை வைத்து போதை போட்டு இருப்பவர்களை எழுப்பும் காட்சியில் எனக்கு வாய்ப்பு கிடைத்து. அதில் நடிக்க நடிகர் வடிவேலுவுக்கு என்னை மிகவும் பிடித்து போய் விட்டது. அந்த படம் தான் நான் நடிகர் வடிவேலுவுடன் நடித்த முதல் படம்” என்று பல விஷயங்களை நடிகர் விஜய் கணேஷ் பகிர்ந்து கொண்டார்.

vijay ganesh - updatenews360
Views: - 504

5

3