மாரடைப்பால் காமெடி நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் !

16 April 2021, 12:34 pm
Quick Share

தமிழ் திரைப்பட உலகின் சிறப்பான நகைச்சுவை நடிகர்களுள் ஒருவர் விவேக். இவரது நகைச்சுவை சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும். இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை எடுத்துரைப்பதால் இவரை சிலர் ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞர்’ என்றும் அழைக்கப்படுகிறார். ஏன் ” பத்மஸ்ரீ ” விவேக் என்று கூட அழைப்பார்கள்.

1990ம் ஆண்டின் தொடக்கத்தில் பாலச்சந்தரின் இயக்கத்தில் துணைநடிகராக தமிழ் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர், தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.

சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் Double Meaning வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு.

எல்லாரையும் சிரிக்க வைத்து ரசிக்கும் இவருக்கு தற்போது மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். இதனால் பல விவேக் ரசிகர்கள் வருத்தமாக இருக்கிறார்கள்.

Views: - 59

0

1