தென்னிந்திய திரையுலகில் பெரிய ஜாம்பவான்களாக கருதப்படுபவர்கள் மணிரத்னம். இவர், உச்சத்தில் இருக்கக்கூடிய ஒரு இயக்குனர். இவர் படம் வருகிறது என்றால் 80, 90 ஏன் 2k கிட்ஸ் வரை கூட பார்க்க ரெடி ஆகுவார்கள். இந்த நிலையில், மணிரத்தினத்தை ஒரு நடிகர் செம டென்ஷன் ஆக்கி இனி இந்த ஹீரோவுடன் நடிக்கவே கூடாது இணையவே கூடாது என்று மணிரத்தினம் முடிவெடுக்கும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவத்தை அந்த ஹீரோவே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்த ஸ்ரீகாந்த் அந்த பேட்டியில் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அப்படி ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்தினத்தைப் பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது ஸ்ரீகாந்த் ஆனால், அதற்கு டெஸ்ட் ஷூட் எல்லாம் நடந்து மணிரத்தினம் ஸ்ரீகாந்த்தை ஓகே செய்து இருக்கிறார். அதே நேரம், மனசெல்லாம் படத்தில் ஒரு ஃபயர் ஆக்ஸிடென்டில் மாட்டிக் கொண்டாராம் ஸ்ரீகாந்த். அப்போது, அவர் முகத்தில் நெருப்புப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம்.
இந்த பக்கம் ஸ்ரீகாந்த் மருத்துவமனையில், இருப்பதை ஒரு அட்வான்டேஜ் ஆக எடுத்துக்கொண்டு மனசெல்லாம் படத்தின் தயாரிப்பாளர் மனசெல்லாம் படத்திலும் அதற்கு அடுத்தபடியாக ஒரு படத்திலும் நடித்துக் கொடுத்துவிட்டு தான் வேறு படங்களில் நீ கமிட்டாக வேண்டும் என அக்ரிமெண்ட் போட்டு விட்டாராம்.
அதனால், ஆயுத எழுத்து படத்தில் ஸ்ரீகாந்தால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அது மட்டுமல்லாமல் ஆயுத எழுத்து படத்திற்காக வாங்கிய அட்வான்ஸை ஸ்ரீகாந்த் அந்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க அதை பார்த்த மணிரத்தினம் என்னை மிகவும் இன்சல்ட் பண்ணுகிற மாதிரியான ஒரு செயல் இனிமேல் உன்னை வைத்து நான் படமே எடுக்க மாட்டேன் என்று முகத்துக்கு நேராகவே மணிரத்தினம் சொல்லிவிட்டாராம். அன்றிலிருந்து இன்று வரை மணிரத்தினம் படத்தில் ஸ்ரீகாந்துக்கு எதுவுமே நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.