பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள்..! உதட்டு முத்தங்கள் போடும் இளம் ஜோடி..!

Author: Udhayakumar Raman
13 October 2021, 8:25 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து பத்து நாட்களே இருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் குரூப் சேரத் தொடங்கிவிட்டார்கள். அடுத்தடுத்து பிரச்சனைகள் முளைக்க இருப்பதால் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ஹிந்தியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸில் 2 ஹவுஸ் மேட்ஸ் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியில் பிக் பாஸ் 15வது சீசன் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பித்து 11 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் மீஷா ஐயர், லேஷன் ஷேகல் ஆகிய இருவரும் காதல் வயப்பட்டு முத்தங்களை பறிமாறிக் கொள்கின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இருவரும் நெருக்கமாக இருக்கும் விடியோவும், அவ்வப்போது உதட்டு முத்தம் கொடுத்து கொண்டும் இருக்கிறார்கள். மேலும் இருவரும் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டு இருப்பதால் மற்ற ஹவுஸ்மேட்ஸ் கலாய்த்து வருகின்றனர். சண்டையும் சச்சரவும் ஆக பார்த்து பழகிய பிக் பாஸ் வீட்டில் சில ரொமான்ஸ் காட்சிகள் நடக்கும் என ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

https://www.instagram.com/p/CU4HJrClu4v/?utm_medium=copy_link

Views: - 216

1

0