இது என்ன புது டுவிஸ்ட்டா இருக்கே: குக் வித் கோமாளி செலிபிரேஷன் ரவுண்ட்!

25 February 2021, 10:04 pm
Quick Share

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்ட ரேகா, ரம்யா பாண்டியன், வனிதா மற்றும் உமா ரியாஷ் ஆகியோர் 2ஆவது சீசனில் கலந்து கொள்ளும் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்ட சமையல் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை ரக்‌ஷன் மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர். செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமோதரன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்நிகழ்ச்சியில், வனிதா, உமா ரியாஷ், ரம்யா பாண்டியன், ரேகா, பிரியங்கா ரோபோ ஷங்கர், தாடி பாலாஜி, ஞானசம்பந்தம், மோகன் வைத்யா ஆகியோர் குக்குளாக கலந்து கொண்டனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் வனிதா டைட்டில் வின்னராக வலம் வந்தார். இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் 2ஆவது சீசன் கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீசனில் பாபா பாஸ்கர், அஸ்வின் குமார், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கனி, ஷகீலா, தீபா, மதுரை முத்து மற்றும் வைல்டு கார்டு மூலமாக ரித்திகா ஆகியோர் குக்குகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை ரக்‌ஷன் மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சமையல் நிகழ்ச்சியை இப்படி காமெடியாக கொடுக்கும் முடியும் என்றால் அது விஜய் டிவியால் மட்டுமே முடியும் என்று அண்மையில் சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சிக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவும் ஷிவாங்கி மற்றும் அஸ்வின் ஆகியோரது கெமிஸ்டரி நன்றாகவே ஒர்க் அவுட்டாகியுள்ளது. இதே போன்று பாலா – பாஸ்கர் காம்பினேஷன், புகழ் – ஷிவாங்கியின் அண்ணன் தங்கை பாசம், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி ஆகியோருடன் புகழ் செய்து வரும் லூட்டிகள் என்று ஒவ்வொரு வாரமும் ஒரே நகைச்சுவையாக இந்நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பு செய்யப்படும் எபிசோடில், முதல் சீசனில் கலந்து கொண்ட வனிதா, ரம்யா பாண்டியன், உமா ரியாஷ் மற்றும் ரேகா ஆகியோர் மீண்டும் 2 ஆவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கும், 2ஆவது சீசனில் உள்ள போட்டியாளர்களுக்கும் இடையில் இந்த வாரம் போட்டி நடக்கிறது. அதனை செலிபிரேஷன் ரவுண்டாக அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த வாரத்துக்கான புரோமோ வீடியோவை விஜய் டெலிவிஷன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 3535

8

1