Cooku With Comali புகழுக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்!

3 February 2021, 2:53 pm
Quick Share

Cooku With Comali நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான புகழ், இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சிரிப்புடா என்ற ரியாலிட்டி ஷோ மூலம் அறியப்பட்டவர் புகழ். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டு தன்னை ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும், மிமிக்கிரி ஆர்டிஸ்டாகவும் நிரூபித்துக் கொண்டார். இவ்வளவு ஏன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் புகழ் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை.

Cooku With Comali நிகழ்ச்சியின் முதல் சீசனில் குக்காக கலந்து கொண்டா ரம்யா பாண்டியன் மற்றும் கோமாளியாக கலந்து கொண்ட புகழ் இருவரது கெமிஸ்டரி இன்றும் பேசப்பட்டு வருகிறது. இதையடுத்து, Cooku With Comali முதல் சீசனுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, Cooku With Comali நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் கோமாளியாக புகழ் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் குக்குகளாக கலந்து கொண்ட பவித்ரா, கனி, தர்ஷா குப்தா, சகீலா ஆகியோருடன் புகழ் செய்து வரும் அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. காண்போரை வியக்க வைக்கும் அளவிற்கு புகழின் செயல் இருந்து வருகிறது. ஒவ்வொன்றும் ரசிகர்களை சிரிக்கவும் வைக்கிறது.

இவ்வளவு ஏன் ஷிவாங்கி மீது புகழ் காட்டும் அன்பிற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இப்படி தனது பெயருக்கு ஏற்றவாறு புகழின் உச்சிக்கு சென்ற அவருக்கு வெள்ளித்திரையிலும் வாய்ப்புகளும் தேடி வருகிறது. ஏற்கனவே தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்று செய்தி வெளியானது. ஆம், உண்மை தான் என்று கூறும் வகையில் வலிமை படத்தின் விக்கிபீடியா பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, புகழ் மற்றும் தொகுப்பாளினி ஜாக்குலின் இருவரும் பேசும் போது, ஜாக்குலின் மறைமுகமாக புகழ் வலிமை படத்தில் நடித்து வருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, காமெடி நடிகர் சந்தானம் நடித்து வரும் புதிய படத்திலும் அவருடன் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அடுத்ததாக, இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹரியின் 16ஆவது படமான இந்தப் படத்தில் அருண் விஜய் ஹீரோவாகவும், பிரியா பவானி சங்கர் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இது அருண் விஜய்யின் 33ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய்யின் 33ஆவது படமான இந்தப் படத்தில், அவருடன் இணைந்து யோகி பாபு, ராதிகா சரத்குமார், பிரகாஷ் ராஜ், கேஜிஎஃப் புகழ் ராமசந்திர ராஜூ ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை டிரம்ஸ்டிக் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. விரைவில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 6

0

0