குக் வித் கோமாளி புகழ், ரகசிய திருமணம் செய்தாரா ? ஷாக்கான ரசிகர்கள்..!

Author: Udayachandran RadhaKrishnan
25 June 2021, 12:21 pm
Pugazh Marriage - Updatenews360
Quick Share

விஜய் டிவி மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவிற்கு காலடி எடுத்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி விட்டது. அந்த வகையில் திவ்யதர்ஷினி, ரம்யா, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா இவர்களெல்லாம் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்து அதன்பின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள்.

இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மிக பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பாலா 2 பேருமே கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். இப்போது புகழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஆனால் இதற்கு முன்பே கைதி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் லாக்டவுன் காலத்தில் அவருக்கு திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. அந்தப் பெண் முஸ்லிம் எனவும் பெண் குக் வித் கோமாளி நண்பர்களை அழைத்து வீட்டில் விருந்து வைத்தார் எனவும் கூறப்பட்டது.

ஆனால் அதை அவரிடம் கேட்டபொழுது ஷாக் ஆகி நானே மேடைக்கு மேடை ஏறி சிங்கிள் சிங்கிள் என்று கூறிக் கொண்டிருக்கிறேன். இந்த செய்திகளை கேட்டால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

Views: - 722

11

4