கைதி படத்தில் நடித்துள்ள குக் வித் கோமாளி புகழ்..! அட இவ்வளவு வருஷம் கவனிக்காம விட்டுட்டோமே…!

22 June 2021, 10:00 am
kaithi pugazh - updatenews360
Quick Share

விஜய் டிவி மூலம் பிரபலமாகி அதன்பின் சினிமாவிற்கு காலடி எடுத்து வைப்பது இப்போது டிரெண்ட் ஆகி விட்டது. அந்த வகையில் திவ்யதர்ஷினி, ரம்யா, பவித்ரா லட்சுமி, தர்ஷா குப்தா, சிவகார்த்திகேயன், சந்தானம், தீனா, மைனா நந்தினி, இவர்களெல்லாம் விஜய் டிவி மூலம் பிரபலமடைந்து அதன்பின் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர்கள்.

இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்களின் மிக பெரிய வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பாலா 2 பேருமே கலந்துகொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். இப்போது புகழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஆனால் இதற்கு முன்பே கைதி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு அது இது எது காமெடி சூப்பர் ஸ்டார் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் புகழ் . அந்தக் காலகட்டத்தில் அவரை அவ்வளவாக தெரியாததால் அந்த படத்தில் இவரைக் கவனிக்காமல் விட்டார்கள் போல. லாக்டவுன் காலத்தில் நேரம் போகாமல் அந்தப் படத்தைப் பார்த்த பார்த்தவர்கள் தற்போது அட நம்ம புகழ் என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Views: - 769

16

4