குக் வித் கோமாளி இர்ஃபான் மனைவிக்கு ஜாம் ஜாம்முன்னு நடந்த வளைகாப்பு.. வெளியான புகைப்படம்..!
Author: Vignesh19 July 2024, 11:16 am
யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார்.
மேலும் படிக்க: எனக்கு அவ்வளவு தான் வேல்யூவா?.. Adjustment-க்கு ரேட் பேசிய ரேகா நாயர்..!
இதனிடையே, சில மாதங்களுக்கு முன்னர் இர்பானுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்துக்கொண்டார்கள். இதனிடையே, திருமணம் ஆன சில நாட்களிலேயே தனது கார் விபத்துக்குள்ளாகி ஒரு அப்பாவி பெண்ணை மோதி அவர் சம்பவ இடத்திலே பலியானார். இந்த செய்தி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் படிக்க: அந்த விஷயத்தால் சுந்தர்.C 2 வருஷம் சும்மா இருந்தாரு.. குஷ்பு வேதனை..!
இந்நிலையில் சமீபத்தில், இர்பான் குழந்தையின் பாலினத்தை குறித்து தெரிந்து கொண்டு அது குறித்த வீடியோ ஒன்றை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலான நிலையில், பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது. அதாவது, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு இந்தியாவில் தடை இருப்பதால், இர்பான் தனது மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று சிசுவின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டார்.
அதனை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். அந்த வீடியோ வெளிவந்து வைரலான நிலையில், பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக, விளக்கமளிக்க இஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், youtube மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க திடமிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பிய நிலை அமைக்கப்பட்ட மருத்துவ குழுவிற்கு whatsapp மற்றும் தொலைபேசி மூலம் தனது மன்னிப்பை கேட்டுக் கொண்டாராம் இஃபான். மன்னிப்பு கேட்டு யூட்யூபில் வீடியோ வெளியிட உள்ளதாகவும். அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்துள்ளது.
இஃபான் மன்னிப்பு கேட்டாலும், கூட குழந்தையின் பாலினம் குறித்து பதிவு வெளியிட்டதற்காக அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், குக் வித் கோமாளி 5 சீசனில் பிரபல யூடியூபர் இர்பான் சமையலில் சூப்பராக கலக்கிவருகிறார். தற்போது, மனைவியின் வளைகாப்பு படு கோலாகலமாக நடந்து உள்ளது. அப்போது, எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இர்பான் வெளியிட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
0
0