விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7 சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இந்த நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது வரை பரபரப்புக்கு குறைவில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.
சமீபத்தில் நிக்சன் அர்ச்சனாவுக்கிடையே பிக் பாஸ் வீட்டில் கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது அர்ச்சனா வினுஷா குறித்து பேச தொடங்கியதும், நிக்சன் சும்மா வினுஷா வினுஷான்னு சொன்னா சொருகீருவேன் என்று மோசமாக பேசியதெல்லாம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது.
நிக்சனின் பேச்சுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சீசனை கமல் சரியாக தொகுத்து வழங்கவில்லை என அவர் மீது மக்கள் அத்திருப்தியில் இருக்கின்றனர். ஆம், தற்போது ஒளிபரப்பாகி வரும் 7ம் சீசனில் கமல் ஒருதலைப்பட்சமாக இருக்கிறார் என விமர்சனம் எழுந்து வருகிறது.
குறிப்பாக பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்துவிட்டு அது சர்ச்சை ஆன பிறகு அதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சமாளித்து, மாயா கேங்குக்கு ஆதரவாக பேசியதால் மக்கள் அவர் மீது கடுங்கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். தொடர்ந்து மக்கள் மாயா மீது வெறுப்பை கக்கி வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆம், கடந்த 10 வாரங்களாக எவிக்ஷனில் இருந்து தப்பித்த கூல் சுரேஷ் தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற எல்லோரும் தூங்கிய பிறகு நள்ளிரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்துள்ளார். இச்சம்பவம் பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.