ஆஸ்கர் விருது பெற்ற ‘Parasite’ விஜய் படத்தின் காப்பி; நாங்கள் வழக்குத் தொடுப்போம்: தயாரிப்பாளர் தேனப்பன் தகவல் ! தளபதி கிட்டயேவா !

15 February 2020, 6:02 pm
Vijay Movie Cover - updatenews360
Quick Share

தெருவில் ஆட்கள் எப்போது வருவார்கள், நாம் எப்போது அவர்களை குரைத்து ஓடவிடலாம் என்று பிராணிகள் காத்து கொண்டு இருக்குமாம் ! அது போல் தயாரிப்பாளர் சங்கமான GUILD – இல் பெரிய ஹீரோ யாராவது அவர்களது படத்திற்கு இந்த தலைப்பு வைப்பார்கள் என்று படமே எடுக்காமல் அந்த Title மட்டும் ரெஜிஸ்டர் செய்து காத்து கொண்டு இருப்பார்கள் ! இதை எல்லாம் மிஞ்சிய சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற ‘பாரசைட்’ திரைப்படம் தமிழில் விஜய் நடித்த ‘மின்சார கண்ணா’ திரைப்படத்தின் காப்பி என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன் குற்றம் சாட்டியுள்ளார் ( Shhhh சிரிக்கப்படாது )

Oscar Awards – இல் ‘பாரசைட்’ படம் ஒரு காட்டு கட்டியது. இந்த படத்திற்கு நிறைய விருதுகள் கிடைத்ததற்கு நம்ம ஊரு சுப்பு முதல் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் வரை பாராட்டுகள் குவிந்துவரும் அதே வேளையில் தற்போது அப்படம் நம்ம ஊரு KS ரவிகுமார் படமான மின்சார கண்ணா படத்தின் காப்பி என்று கேலி பேசி வந்தார்கள். அதை சீரியஸாக எடுத்துக் கொண்டு மின்சார கண்ணா படத்தின் தயாரிப்பாளார் தேனப்பன் அவர்கள் Parasite கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் செய்தோர் மீது வழக்கு தொடுவதாக பேட்டி அளித்தார்.

இதுகுறித்து அவர் ஆங்கில இணைய தளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் தேனப்பன் கூறியதாவது: ”ஆஸ்கர் விருது பெற்ற கொரிய திரைப்படமான ‘பாரசைட்’ 1999 விஜய் – நடித்து வெளியான ‘மின்சாரா கண்ணா’ படத்தின் காப்பி. இன்னும் சில நாட்களில் நான் ஒரு சர்வதேச வழக்கறிஞரின் உதவியுடன் வழக்குத் தாக்கல் செய்வேன். எனது படத்திலிருந்து கதைக்களத்தை எடுத்துள்ளனர், என்று சீரியஸாக பேசி இருக்கிறார். அதாவது Korean Film makers நம்ம ஊரு விஜய் படத்தை பார்த்து காப்பி அடித்தார் என்று நம்பி கொண்டிருக்கிறார் என்பது என்னவென்று சொல்வது ?

Vijay Movie - updatenews360