கமல் நடித்த இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியா? நெட்டிசன்கள் வைரல்

Author: kavin kumar
25 October 2021, 5:46 pm
Quick Share

தமிழ் சினிமாவில் சிவாஜிக்குப் பிறகு சிறந்த நடிகர் என ரசிகர்கள் கமலஹாசனை தான் கூறி வருகின்றனர். பல ஹிட் படங்களை கொடுத்த கமல்ஹாசன் புதுமையான படங்களை கொடுத்துள்ளார். அப்படி புதுமையாக கொடுத்த ஒரு படம் தான் மைக்கேல் மதன காமராஜன்.

அந்த படத்தில் 4 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கமல். இந்த படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி மிகவும் த்ரில்லாக இருக்கும். மலை உச்சியில் இருக்கும் வீட்டில் முக்கிய கதாபாத்திரங்கள் மாட்டி கொள்வார்கள். அவர்கள் இருக்கும் அந்த வீடு மலையில் இருந்து விழுந்து விடுமோ என மிகவும் பரபரப்பாக இருக்கும்.

அந்த காட்சியை பார்க்கும் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கு வரவைக்கும் காட்சியை ரசிகர்கள் பெரிதும் ரசித்தனர். தற்போது அந்த காட்சி ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டது என இணையத்தில் சிலர் பகிர்ந்து வருகின்றனர். சார்லி சாப்ளின் நடித்த The Gold Rush 1925 படத்தில் இருந்து சுட்டுள்ளனர் என பகிர்ந்து வருகின்றனர்.

Views: - 348

3

0