நடிகர்களை வியாபாரிகளாக மாற்றும் கொரோனா ஊரடங்கு

27 June 2020, 10:14 pm
Quick Share

ஊரடங்கு உலகெங்கிலும் உள்ள மக்களின் தொழிலை வெகுவாக பாதித்துள்ளது, மேலும் சிலர் வேலைகளையும் இழந்துள்ளனர். நடிகர்களும் இயக்குநர்களும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். நடிகர் ஒருவர் ஊரடங்கில் நிதி நெருக்கடி காரணமாக மீன் விற்பனையாளராக மாறிவிட்டார்.

பிரபல மராத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரபலமானவர் மராத்தி நடிகர் ரோஹன் பெட்னேகர். ஊரடங்கு இவருக்கு பெரும் நிதி நெருக்கடியை கொடுத்துள்ளது. அவரது குடும்பமே இவரது சம்பாத்தியத்தை நம்பி இருந்தது. இதை சரிசெய்ய இப்போது உலர்ந்த மீன்களின் பாக்கெட்டுகளை விற்பனை செய்கிறார்.

ரோஹன் தனது எதிர்கால நடிப்பு வாழ்க்கையைப் பற்றி கவலை படுகிறார். ஏனெனில் 3 மாதங்களுக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார், ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் அது நடக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், ரோஹன் நம்பிக்கையுடன் இருக்கிறார். தற்போது உலர்ந்த மீன்களை விற்பனை செய்வதில் தனக்கு வெட்கமில்லை என்று கூறியுள்ளார், ஏனென்றால் பசிக்கு தொழில் தெரியாது வேண்டும் தெரிவித்திருக்கிறார்.