ஏலேய்… எங்க இருந்து புடிசீங்க இவர? ஆளு சூப்பரா இருக்காரு… அப்போவே அஜித்தை சைட் அடித்த பிரபலம்!

Author:
8 ஆகஸ்ட் 2024, 8:28 மணி
Quick Share

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் முதன் முதலில் மலையாளத்தில் வெளிவந்த “பிரேம புத்தகம்” என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகம் ஆனார். அதையடுத்து 1993-ல் அமராவதி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகர் ஆனார்.

ajith-updatenews360

தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தையும் நம்பர் ஒன் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித் நடித்த வருகிறார்.

இப்படியான நேரத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான தக்ஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குறித்து ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்திருக்கிறார். அதாவது, நான் அஜித் நடித்த அமராவதி திரைப்படத்தில் அவருக்கு ஆடை வடிவமைப்பு செய்தேன். அப்போது அவருக்கு மலையாளம் தெரியாது என்று நான் நினைத்திருந்தேன்.

ajith billa

அந்த சமயத்தில் எனது அருகில் இருந்தவர்களிடம் நான் மலையாளத்தில் “ஆளு சூப்பரா இருக்காரு… இவர நம்ம மாடலுக்கு பயன்படுத்தலாம்” என்று சொன்னேன். அது அஜித்தின் காதிலும் விழுந்தது. அடுத்த நாள் தான் எனக்கு அஜித்துக்கு மலையாளம் நன்றாக தெரியும் என்ற விஷயமே தெரிந்து கொண்டேன்.

எனவே அடுத்த நாள் நான் சூட்டிங்கிற்கே போகவில்லை. என்ன சொல்வாரோ என்ற ஒரு மாதிரி ஷையா இருந்தது. இதை அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா இன்றுவரை சொல்லி சொல்லி என்னை கிண்டல் செய்வார் என தக்ஷ அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள்… அஜித் சைட் அடிக்காதவங்க யாருமே இருக்க முடியாதும்மா நீ மட்டுமா? எனக்கு கூறி வருகிறார்கள்.

  • Vijay TVK அவசர அழைப்பு விடுத்த தவெக.. விஜய் முக்கிய ஆலோசனை.. பரபரக்கும் களம்!
  • Views: - 110

    0

    0