நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து “தீங்கிரை” என்ற திரைப்படத்தை தயாரித்த பிரசாத் என்பவர் அதிமுகவின் முன்னாள் IT Wing நிர்வாகியாக செயல்பட்டவர். நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள மதுவிடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக இவரை போலீஸார் கைது செய்தது.
இவரை விசாரித்ததில் பிரதீப் என்பர் இவருக்கு போதை பொருட்களை சப்ளை செய்ததாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பிரதீப்பிடம் விசாரணை நடத்தியபோது, நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் கேட்டதாக கூறி பிரசாத் தன்னிடம் கொக்கைன் வாங்கிச் சென்றதாக வாக்குமூலம் கொடுத்தார். அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்தை போலீஸார் கைது செய்தனர்.
அவரது இரத்தமாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதனை தொடர்ந்து எழும்பூர் 14 ஆவது பெருநகர உயர்நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து ஸ்ரீகாந்தை ஜூலை 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் அடிபட்ட நிலையில் கிருஷ்ணா தலைமறைவானதாக கூறப்பட்டது. சம்மன் அனுப்பிய பிறகும் அவர் ஆஜராகவில்லை, அவர் கேரளாவில் இருப்பதாக தகவல் வெள்ளியானது. அதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீஸார் அவரை தேடி வந்தனர். எனினும் நடிகர் கிருஷ்ணா தனது வக்கீலுடன் ஆஜரான நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வைத்து அவரை விடிய விடிய விசாரித்தனர்.
இந்த விசாரணையில் அவர், தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதால் போதை பொருள் பயன்படுத்த வாய்ப்பே இல்லை என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அவர் போதை பொருள் பயன்படுதியுள்ளாரா என்பதை கண்டறிய இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என வந்ததாக ஒரு தகவல் வெளிவந்தது.
எனினும் போலீஸார் நடிகர் கிருஷ்ணாவிடம் பல கோணங்களில் விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து அவரது மொபைல் ஃபோனில் வாட்ஸ் அப் உரையாடல்களை நோட்டமிட்டனர் போலீஸார். அதில் இந்த வழக்கில் கைதான நபர்களிடம் கிருஷ்ணா Code Word மூலமாக பேசியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இந்த Code Word குறித்து மேலும் விசாரணை நடத்திய நிலையில் போதை பொருள் சப்ளையர் கெவின் என்பவரிடம் கிருஷ்ணாபோதை பொருள் வாங்கியதாக உறுதியானது. இதனை தொடர்ந்து கிருஷ்ணா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணாவை ஜூலை 10 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் போதை பொருள் சப்ளையர் கெவினையும் ஜூலை 10 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் கிருஷ்ணாவுக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.