பணத்திற்கு ஆசைப்பட்டு வேறு சேனலுக்கு தாவினாரா வெங்கடேஷ் பட்…? உண்மை தகவல் இதோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் செஃப் வெங்கடேஷ் பட். சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து தேர்வில் தோல்வியடைந்தார்.

அதன் பின்னர் தனக்கு பிடித்த செஃப் தொழிலை கையில் எடுத்தார். தாஜ் ஹோட்டல், தி லீலா பேலஸ் உள்ளிட்ட பெரிய ஹோட்டல்களில் பணியாற்றி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று புகழ் பெற்ற வெங்கடேஷ் பட் தற்போது ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி’ தொடரின் 5-வது சீசனில் தான் பங்கேற்வில்லை என கூறி அதிர்ச்சியளித்திருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக ஊடக தளங்களில், குக் வித் கோமாளி சீசன் 5 புதிய சீசன் தொடங்கும் என்றும், இந்த நிகழ்ச்சியில் நான் நடுவராக இருப்பேன் என செய்திகள் வெளியிட்டு வருகின்றன. மில்லியன் கணக்கான மக்களை மகிழ்ச்சியடையச் செய்த இந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து நான் ஓய்வு எடுக்க போகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியை உருவாக்கி செயல்படுத்திய எனது இயக்குனர் மற்றும் நிகழ்ச்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி.

இந்நிகழ்ச்சி பலரது மன அழுத்தத்தை குறைக்க கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருந்ததை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுவது, ஒரு கடினமான முடிவு தான். இருப்பினும் நான் அதில் உறுதியாக நிற்கிறேன். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். செஃப் வெங்கடேஷ் பட்டின் இந்த முடிவு குக் வித் கோமாளி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதையடுத்து குக் வித் கோமாளியின் இன்னொரு நடுவர் செஃப் தாமுவும் விலகிவிட்டதாக வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார்.

இதையடுத்து ஒரு புது நிகழ்ச்சியில் சந்திப்பதாக வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகிய இருவருமே வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருக்கின்றனர்.இதனால் இவர்கள் இருவரும் விஜய் தொலைக்காட்சியை விட்டு வெளியேறி அதிக சம்பளம் பெற்றுக்கொண்டு சன் டிவியில் தான் புது ஷோ தொடங்க இருக்கிறார்களா என பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், அது உண்மையில்லை.

ஆம், அவர்கள் இருவரும் விஜய் டிவியே தொடங்கும் புது சமையல் ஷோவை நடத்த உள்ளதாக பேசிக்கொள்கிறார்கள். அதற்கு ப்ரோமோஷன் செய்யும் வகையில் தான் குக் வித் கோமாளியில் இருந்து விலகிவிட்டதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.அப்படி வெங்கேஷ் பட் தாமு இருவரும் புது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார்? என பெரிய கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்கிறது என்று!

UpdateNews360 Rajesh

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.