விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியிருந்தாலும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் புகழ். இதனை தொடர்ந்து “சிக்ஸர்” என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்த புகழ், அதன் பின் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்.
“அயோத்தி” திரைப்படத்தில் புகழ் ஏற்று நடித்த பாண்டி என்ற கதாபாத்திரம் அவரது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை காட்டியது. இந்த நிலையில் புகழ் “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தை ஜே சுரேஷ் இயக்கியிருந்தார். புகழுக்கு ஜோடியாக சிரின் காஞ்ச்வாலா நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட புகழ், “புகழ் நடித்தால் அந்த படம் ஓடாது என பலர் விமர்சிக்கிறார்கள். இதற்கு முன் வலிமை, எதற்கும் துணிந்தவன், சந்தானம் நடித்த திரைப்படங்களில் நடித்தபோதெல்லாம் இது போன்ற விமர்சனங்கள் வந்ததில்லை. சமீப காலமாகத்தான் இது போன்று நடக்கிறது.
இது எனக்கு மட்டுமில்லை, எல்லா நடிகர்களுக்கும் இது நடக்கிறது. இப்படி சொன்னால்தான் நாம் வெளியே தெரிவோம் என்று ஒரு கூட்டம் அலைந்துகொண்டு இருக்கிறது. நீங்கள் என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் பரவாயில்லை, ஆனால் என்னை அப்படி பேசுவது அந்த படத்தில் நடித்த மற்றவர்களையும் பாதிக்கிறது” என மனம் நொந்தபடி பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.